நீர்கொழும்பு நீதவானின் கையொப்பத்தைப் போலியாக இட்டு வழக்கு அறிக்கையைத் தயாரித்து 3,500,000 ரூபாய் பணத்தைப் பெற்ற முன்னாள் நீதிமன்ற ஊழியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
நீர்கொழும்பு விசேடக் குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகளால் இன்று குறித்த நபர் கைது செய்யப்பட்டார்.
வென்னப்புவ பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவருக்கு விதிக்கப்பட்டுள்ள வெளிநாட்டுப் பயணத்தடையை நீக்குவதற்காகச் சந்தேகநபர் குறித்த ஆவணத்தைத் தயாரித்துள்ளதாகத் தெரியவந்துள்ளது.
அத்துடன் குறித்த சந்தேகநபர் வெலிசர நீதிமன்றத்தின் அலுவலக உதவியாளராகக் கடமையாற்றிய நிலையில் இவ்வாறான மோசடிகளில் ஈடுபட்டதன் காரணமாகப் பணிநீக்கம் செய்யப்பட்டவர் என விசாரணைகளில் தெரியவந்துள்ளது