மட்டக்களப்பு – காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புதுக்குடியிருப்பு பகுதியில் இன்று (14) அதிகாலை எரிபொருள் பவுசர் வாகனம் மதிலொன்றில் மோதியதுடன், இதனால் டெலிகொம் தொலைத்தொடர்பு வலையமைப்பின் தூண்களும் உடைக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக அப்பிரதேசத்தில் தொலைபேசி இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது.கல்முனையிலிருந்து மட்டக்களப்பு நோக்கிப் பயணித்துக்கொண்டிருந்த தனியாருக்கு சொந்தமான எரிபொருள் பவுசரொன்று வேகக் கட்டுப்பாட்டை இழந்து, வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியுள்ளது.
இவ்விபத்து இன்று அதிகாலை 3.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.இந்த விபத்தில் சிக்கிய எரிபொருள் பவுசரின் முன்பகுதி பலத்த சேதமடைந்துள்ளது.
அத்தோடு பவுசர் மோதியதில் வீதியோரம் உள்ள தனியாருக்கு சொந்தமான வளாகமொன்றின் மதிலின் ஒரு பகுதியும், இலங்கை டெலிகொம் தொலைத்தொடர்பு வலையமைப்பின் தூண்களும் உடைக்கப்பட்டுள்ளன. இதனால் அப்பிரதேசத்தில் தொலைத்தொடர்பும் துண்டிக்கப்பட்டுள்ளது.
இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளில் காத்தான்குடி பொலிஸார் ஈடுபட்டுள்ளனர்.