சிலாபம் தெதுரு ஓயாவில் நீரில் மூழ்கி இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இவர் மற்றுமொரு நபருடன் தெதுரு ஓயாவில் நீராடச் சென்ற போதே நீரில் மூழ்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பின்னர், கரைக்குக் கொண்டு வரப்பட்டு சிலாபம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட அவர் உயிரிழந்தார். உயிரிழந்தவர் ஹட்டன், வட்டவன பிரதேசத்தை சேர்ந்த 20 வயதுடைய இளைஞன் என பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சிலாபம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.