கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழி அகழ்வுப் பணி நிறைவு.!

0
83

கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழியிலிருந்து இதுவரை 52 மனித எலும்புக் கூட்டுத் தொகுதிகள் மீட்கப்பட்டுள்ளதாக முல்லைத்தீவு மாவட்ட சட்ட வைத்திய அதிகாரி கனகசபாபதி வாசுதேவ தெரிவித்துள்ளார்.

முல்லைத்தீவு – கொக்குத்தொடுவாய் மனித புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வாய்வின், பத்தாம் நாள் நேற்று (15) அகழ்வாய்வுப் பணிகளின் நிறைவில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனை தெரிவித்தார்.

இதன்போது கருத்துத் தெரிவித்த அவர், கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழியில் மூன்றாம் கட்டத்தின் பத்தாம் நாள் அகழ்வுப் பணிகள் இன்று (15) இடம்பெற்றது. இன்றுடன் அநேகமாக இந்த மனிதப் புதைகுழியில் இருந்த மனித எலும்புக்கூட்டுத் தொகுதிகள் முழுவதும் மீட்க்கப்பட்டுள்ளன. ஒட்டுமொத்தமாக இதுவரை 52 மனித எலும்புக்கூட்டு தொகுதிகள் மீட்க்கப்பட்டுள்ளன.

அத்துடன் இன்று துப்பாக்கிச் சன்னம் மற்றும் சிறப்புக் கோர்வையும் சான்றுப்பொருட்களாக மீட்க்கப்பட்டுள்ளன. அடுத்துவரும் நாட்களில் இந்த புதைகுழி தொடர்பான சில நீதிமன்ற நடவடிக்கைகள் தொடரும் என தெரிவித்தார்.

முல்லைத்தீவு கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழியின் மூன்றாங்கட்ட அகழ்வாய்வின், பத்தாம் நாள் அகழ்வாய்வுச் செயற்பாடுகள் நேற்று (15) முன்னெடுக்கப்பட்டது.

முல்லைத்தீவு நீதிமன்ற நீதிபதி தர்மலிங்கம் பிரதீபன் முன்னிலையில், சட்ட வைத்திய அதிகாரி கனகசபாபதி வாசுதேவ தலைமையில் தொல்லியல் பேராசிரியர் ராஜ் சோமதேவ தலைமையிலான குழுவினர்
தடயவியல் பொலிசார், உள்ளிட்ட தரப்பினரின் பங்குபற்றுதல்களுடன் இந்த பத்தாம் நாள் அகழ்வாய்வுகள் இடம்பெற்றன.

அந்தவகையில் தொடர்ச்சியாக இடம்பெறும் அகழ்வாய்வுப் பணிகளில் இன்று வரை (15) அடையாளம் காணப்பட்ட மனித எலும்புக்கூட்டுத் தொகுதிகளிலிருந்து மூன்றாம் கட்டத்தில் 12 எலும்புக் கூட்டுத்தொகுதிகள் அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழியில் இதற்கு முன்னர் இடம்பெற்ற இரண்டு கட்ட அகழ்வாய்வுகளின் போது 40மனித எலும்புக்கூட்டுத் தொகுதிகள் அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளதுடன், மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளில் இதுவரை மீட்கப்பட்ட 12 மனித எலும்புக் கூட்டுத்தொகுதிகளுடன் மொத்தம் 52 மனித எலும்புக்கூட்டுத்தொகுதிகள் அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here