அரச ஊழியர்களுக்கு 10,000 ரூபா கொடுப்பனவு; அமைச்சரவை அங்கீகாரம்.!

0
92

அண்மையில் ஆரம்பிக்கப்பட்ட வேலைநிறுத்தத்தில் கலந்து கொள்ளாமல் பணிக்கு சமூகமளிக்கும் நிறைவேற்று தரத்திற்கு கீழ் உள்ள அரச ஊழியர்களுக்கு கொடுப்பனவு வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

அதன்படி, அந்த ஊழியர்களுக்கு 10,000 ரூபா கொடுப்பனவு மற்றும் சான்றிதழ்கள் வழங்குவதற்காக அதிபர் ரணில் விக்ரமசிங்க சமர்ப்பிக்கப்பட்ட முன்மொழிவுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

இதேவேளை, நிறைவேற்று தரத்திற்கு உள்ளடங்காத அரசாங்க அதிகாரிகளுக்கும் விசேட சம்பள உயர்வொன்றை வழங்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியிருந்தது.

பாராட்டுச் சான்றிதழ்

இதன்படி, 2024 ஆம் ஆண்டு ஜூலை 8 ஆம், 9 ஆம் திகதிகளில் கடமைக்கு சமூகமளித்த அதிகாரிகளுக்கு மாத்திரம் இந்த சம்பள உயர்வு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

மேலும், எதிர்கால பதவி உயர்வுகளுக்குப் பயன்படுத்தும் வகையில் விசேட பாராட்டுச் சான்றிதழொன்றை வழங்குவதற்கும் அதிபர் ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) சமர்ப்பித்த முன்மொழிவுக்கு அமைச்சரவை கடந்த 09 ஆம் திகதி அங்கீகாரம் வழங்கி இருந்தமை குறிபிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here