வவுனியாவில் அரச ஊழியரான இளம் யுவதி ஒருவர் தங்கியிருக்கும் தனியார் வாடகை வீட்டில் குளிப்பதை தொலைபேசியில் வவுனியா பல்கலைக்கழக போதானாசிரியர் ஒருவர் வீடியோ எடுக்க முயன்ற சம்பவம் ஒன்று வீடியோவாக வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வவுனியாவில் அரச ஊழியராக வேலை செய்யும் சகோதர மொழி ஊழியர் ஒருவர் வவுனியா, திருநாவற்குளம் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் சில யுவதிகளுடன் இணைந்து தங்கியுள்ளார்.
குறித்த வீட்டில் வவுனியா பல்கலைக்கழகத்தில் ஆங்கிலப் பிரிவில் போதானாசியராக பணியாற்றும் ஒருவர் குழு வகுப்புக்கள் நடாத்தி வருகின்றார்.
குறித்த வீட்டில் அவர் வெளியில் கற்பித்துக் கொண்டிருந்த போது சகோதர மொழி அரச ஊழியரான யுவதி ஒருவர் குளியலறைக்குள் சென்று குளித்துள்ளார்.
இதன்போது குளியலறைப் பக்கம் சென்ற போதானாசிரியர் குளியறையின் மேல் துவாரத்தின் ஊடாக கைத்தொலைபேசியை உயர்த்தி வீடியோ எடுக்க முயன்றுள்ளதுடன், அதன் பின் குளியலறையின் மறுபக்கம் தவன்று சென்றுள்ளார்.
அந்த அரச ஊழியரான இளம் யுவதி சத்தம் கேட்டு வெளியில் இருந்த சக யுவதிகளை அழைத்த போது குறித்த போதானாசிரியர் குனிந்து ஓடியபடி வெளியேறியுள்ளார். குறித்த காட்சிகள் வீட்டில் பொருத்தப்பட்டிருந்த சிசீரீவியில் பதிவாகியுள்ளது.