ஓமன் அருகே எண்ணெய் கப்பல் ஒன்று கடலில் மூழ்கியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
அந்த கப்பலில் 16 பேர் இருந்ததாக கூறப்படுகிறது.
அவர்களில் 13 பேர் இந்தியர்கள். மற்ற மூவர் இலங்கையர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏமன் நாட்டில் உள்ள ஏடன் துறைமுகத்தை நோக்கி கப்பல் சென்று கொண்டிருந்தபோதே குறித்த விபத்து ஏற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.