முல்லைத்தீவு மாவட்டம் – முள்ளியவளை பொலீஸ் பிரிவிற்கு உட்பட்ட பகுதி ஒன்றில் பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உள்ளான 14 வயது சிறுமி ஒருவர் மருத்துவ சிகிச்சைக்கா கடந்த யூன் மாதம் முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் பற்றி தெரியவருகையில்..
14 வயது சிறுமி ஒருவர் கடந்த 11.06.2024 அன்று முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்ற நிலையில் அவர் பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உள்ளாகியள்ளமை தெரியவந்துள்ளது.
சிறுமியிடம் சட்டவைத்திய அதிகாரியால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது சிறுமியை கடந்த ஏப்ரல் மாதம் முள்ளியவளை பகுதியினை சேர்ந்த இளைஞன் ஒருவர் பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உள்ளாகியுள்ளமை தெரியவந்துள்ளது.
குறித்த சிறுமி சிறுவர் நன்நடத்தை பிரிவினால் யாழ்ப்பாணத்தில் உள்ள சிறுவர் இல்லத்தில் நீதிமன்ற உத்தரவிற்கு அமைய வைக்கப்பட்டுள்ள நிலையில் இந்த சம்பவத்துடன் தொடர்புடை முள்ளியவளை பகுதியினை சேர்ந்த சந்தேகநபரான இளைஞனை கைதுசெய்யும் நடவடிக்கையில் முள்ளியவளை பொலீசார் ஈடுபட்ட வேளை இளைஞன் கிராமத்தில் இருந்து தலைமறைவாகியுள்ள நிலையில் தற்போது இந்தியா தமிழ்நாட்டிற்கு தப்பி சென்றுள்ளதாக தெரியவந்துள்ளது.
முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றத்தினால் பிடியாணை பிறப்பிக்கப்பட்ட பாலியல் குற்றச்செயல் புரிந்த குறித்த இளைஞனை கைது செய்யும் நடவடிக்கையில் இலங்கை பொலீசார் ஈடுபட்டுவருகின்றார்கள்.