முள்ளியவளை 3ம் வட்டாரப்பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வசித்து வந்த அரச உத்தியோக குடும்பத்தின் வீடு உடைக்கப்பட்டு பெறுமதியான நகைகள் கொள்ளையிடப்பட்டுள்ளதாக முள்ளியவளை பொலீஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் 16.07.2024 அன்று இரவு இடம்பெற்றுள்ளது.
நெடுங்கேணியினை சேர்ந்த குறித்த குடும்பம் முள்ளியவளை 3 ம் வட்டராப்பகுதியில் வாடகை வீட்டில் தங்கி வாழ்ந்து வருகின்றார்கள், வெலிஓயா பிரதேசத்தில் தொழில் நுட்ப உத்தியோகராக கடமையாற்றி வருகின்றார்.
இவரது வீட்டிற்குள் நுழைந்த கொள்ளையர்கள் வீட்டில் இருந்த 17 இலட்சம் பெறுமதியான நகைகள் கொள்ளையிடப்பட்டுள்ளதாக முறைப்பாடு பதிவுசெய்யப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் முள்ளியவளை பொலீசார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றார்கள்.