யாழ்ப்பாணத்திலிருந்து வவுனியா நோக்கி சென்ற அரச பஸ் மீது தாக்குதல் – பயணி ஒருவர் காயம்.!

0
158

மதுபான போத்தலால் அரச பஸ் மீது தாக்குதல் நடாத்தப்பட்ட நிலையில் பயணி ஒருவர் காயமடைந்துள்ளார். குறித்த சம்பவம் நேற்று செவ்வாய்க்கிழமை (16) இடம்பெற்றுள்ளது.

யாழ்ப்பாணத்திலிருந்து வவுனியா நோக்கி பயணித்துக் கொண்டிருந்த இலங்கை போக்குவரத்து சபை வவுனியா வீதிக்குரிய பஸ் மீது இவ்வாறு தாக்குதல் 2 மணியளவில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கிளிநொச்சி வைத்தியசாலையை அண்மித்த பகுதியில் வைத்து தனியார் பஸ் காப்பாளர் ஒருவரால் மதுபான போத்தல் மூலம் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ் ஒன்றுக்கு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தாக்குதலை மேற்கொண்ட நபரை பொதுமக்கள், பயணிகள், சாரதி மற்றும் காப்பாளரினால் பிடிக்கப்பட்டு கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவத்தில் மதுபான போத்தலின் கண்ணாடி துகள்கள் பட்டு பயணி ஒருவரும் காயமடைந்துள்ளதோடு சாரதி பயணிகளுக்கு எந்தவிதமான ஆபத்தும் வராமல் பாதுகாப்பாக பஸ்ஸை நிறுத்தியுள்ளார்.

மேலும் சம்பவம் தொடர்பில் கிளிநொச்சி பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here