அர்ச்சுனா வெளியேற்றப்பட வேண்டும்.. இல்லையேல் போராட்டத்தில் குதிப்போம் – வைத்தியர்கள்.!

0
101

சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் முன்னாள் பதில் வைத்திய அத்தியட்சகர் இராமநாதன் அர்ச்சுனா காலை 8 மணிக்கு முன்னதாக வைத்தியசாலை விடுதியில் இருந்து வெளியேற்றப்படவேண்டும் என தெரிவித்த சாவகச்சேரி ஆதார வைத்தியசாலை அரச வைத்திய அதிகாரிகள் சங்க கிளையினர், இல்லையேல் இன்று காலை 8 மணி முதல் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் குதிப்போம் என எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சாவகச்சேரி ஆதார வைத்தியசாலை அரச வைத்திய அதிகாரிகள் சங்க கிளையினரால் இது தொடர்பில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் செயலாளருக்கும், வடக்கு மாகாண சுகாதார பணிப்பாளர், யாழ்ப்பாணம் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர், சாவகச்சேரி ஆதார வைத்தியசாலை பதில் அத்தியட்சகருக்கும் கடிதம் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது.

அக்கடிதத்தில்,வைத்தியர் அர்ச்சுனா இராமநாதன் மாற்றப்பட்டு புதிய வைத்திய அத்தியட்சகர் நியமிக்கப்பட்டதன் பின்பு வைத்தியசாலை நடவடிக்கைகள் யாவும் சுமுகமான நிலைக்குத் திரும்பியுள்ளமை நீங்கள் யாவரும் அறிந்த வொன்று.

வைத்தியர் அர்ச்சுனா இராமநாதன் வைத்தியசாலை விடுதியை மீள ஒப்படைக்காமல் அங்கு தங்கியிருந்து வைத்தியசாலைக்குள் வெளியாட்களை அழைப்பது, சமூக வலைத்தளப் பதிவுகளூடாக மக்களை வைத்தியர்களுக்கு எதிராக திசை திருப்ப முனைவது, போன்ற நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவது வைத்தியசாலையில் கடமையில் இருக்கும் வைத்தியர்களும் விடுதியில் உள்ள வைத்தியர்களும் சாதாரண செயற்பாடுகளை நிறைவேற்ற முடியாது சிரமங்களை ஏற்படுத்துவதோடு பாதுகாப்பு அச்சுறுத்தல்களையும் ஏற்படுத்தி வருகின்றது.

இவ்விடயம் தொடர்பாக…

மத்திய மற்றும் மாகாண சுகாதார அதிகாரிகளுக்குத் தெரியப்படுத்தியும் இதுவரை எந்த நடவடிக்கைகளையும் மேற்கொள்ளாத காரணத்தினால் நாம் வைத்தியசாலை நடவடிக்கைகளை சுமூமாக்குவதற்கும் வைத்தியர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் தொழிற்சங்க நடவடிக்கைகள் மீண்டும் மேற்கொள்ள வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளோம்.

இவ்விடயம் தொடர்பாக பொதுமக்களாகிய தாங்கள் அறிவுக் கண்கொண்டு சிந்தித்து செயற்படுமாறு மருத்துவ அதிகாரிகள் சங்கத்தினராகிய நாம் கேட்டுக் கொள்கின்றோம்.

மத்திய மற்றும் மாகாண சுகாதார அதிகாரிகள் வைத்தியர் இராமணாதன் அர்ச்சுனாவிடமிருந்து இன்று (17) காலை 8 மணிக்கு முன்பு வைத்தியசாலை விடுதியை பெற்று வைத்தியசாலை சேவையை சுமூகமாக இயங்குவதற்கும் வைத்தியர்களிற்குரிய பாதுகாப்பை உறுதிப்படுத்தவதற்குரிய நடவடிக்கைகளை எடுக்க தவறின் நாம் எமது உறுப்பினர்களாகிய வைத்தியர்கள் அனைவரையும் காலை 8 மணி முதல் வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனா விடுதியை ஒப்படைத்து வெளியேறும் வரை தொழிற்சங்க போராட்டமாக யாழ் பிராந்திய சுகாதார பணிமனையில் இனைக்கவுள்ளோம் என்பதை மிக மனவருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கின்றோம் – என்றுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here