லண்டனில் இருந்து, யாழ்ப்பாணம் வருகை தந்தவர், திடீர் சுகவீனமாக காரணமாக உயிரிழந்துள்ளார்.
காரைநகர் மணற்காட்டு பகுதியை சேர்ந்த சச்சிதானந்தம் சிவசிதம்பரநாதன் (வயது-64) என்பவரே உயிரிழந்துள்ளார்.
தனது தந்தையின் இறுதி கிரியைகளுக்காக குறித்த நபர் கடந்த 30ஆம் திகதி குடும்பத்துடன் யாழ்ப்பாணம் காரைநகர் பகுதிக்கு வந்துள்ளார்.
இந்நிலையில், நேற்று முந்தினம் திங்கட்கிழமை உடல்நல குறைவால் பாதிக்கப்பட்ட நிலையில் வைத்திய சாலையில், அனுமதிக்கப்பட்டுள்ளார்.
வைத்திய சாலையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்றுமுன்தினம் உயிரிழந்துள்ளார்.