இந்தியாவில் இருந்து 800க்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகளுடன் யாழ்ப்பாணம் வந்த கப்பல்..!

0
134

இந்தியா – சென்னையில் இருந்து பயணிகள் சுற்றுலா சொகுசுக் கப்பல் ஒன்று இன்றையதினம் இலங்கையை வந்தடைந்துள்ளது.

800க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றியவாறு குறித்த கப்பலானது இன்று காலை ஆறு மணியளவில் யாழ்ப்பாணம் – காங்கேசன்துறைமுகத்தை வந்தடைந்தது.

குறித்த கப்பலானது நேற்று முன்தினம் ஹம்பாந்தோட்டையை வந்தடைந்தது.

அங்கிருந்து பயணத்தை ஆரம்பித்து நேற்றையதினம் திருகோணமலை துறைமுகத்தை வந்தடைந்தது. இந்நிலையில் இன்றையதினம் காங்கேசன் துறைமுகத்தை வந்தடைந்தது.

குறித்த கப்பலானது இன்று பிற்பகல் மீண்டும் இந்தியாவை நோக்கி பயணித்தை ஆரம்பிக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here