கடவுச்சீட்டுக்கு விண்ணப்பிக்கும் போது இணையவழியில் முன் பதிவு செய்வது அவசியமானது எனவும் இன்று (19) முதல் இந்த புதிய முறை அமுலுக்கு வருவதாகவும் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதன்படி, கடவுச்சீட்டினை விண்ணப்பிப்பதற்கு www.immigration.gov.lk என்ற இணையத்தளத்தின் ஊடாக முன் பதிவு செய்யப்பட வேண்டும்.
ஒன்லைனில் பதிவு செய்ததன் பின்னர் முன்னுரிமை முறையின் படி கடவுச்சீட்டுகள் வழங்கப்படும் என குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பான புதிய முறை எதிர்வரும் வெள்ளிக்கிழமை முதல் ஆரம்பிக்கப்படவுள்ளது.