குளவி கொட்டுக்கு இலக்கான முதியவர் ஒருவர் மட்டக்களப்பு போதனை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
மட்டக்களப்பு – மயிலம்பாவெளி பகுதியைச் சேர்ந்த ஒன்பது பிள்ளைகளின் தந்தையான ராமச்சந்திரன் முத்துலிங்கம் என்பவரே வியாழக்கிழமை (18) உயிரிழந்துள்ளார்.
குறித்த நபர் கடந்த வெள்ளிக்கிழமை 12ம் திகதி தனது மகளின் வீட்டிற்கு சென்றபோது மரத்திலிருந்த குளவிக்கூடு வீழ்ந்து அதிலிந்த குளவி கலைந்து கொட்டியதில் இவர் சுகயீனமுற்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.
ஏறாவூர் பொலிஸாரின் பணிப்புரைக்கு அமைவாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் திடீர் மரண விசாரணை அதிகாரி தம்பிப்பிள்ளை தவக்குமார் சம்பவம் தொடர்பில் ஆராய்ந்து இன்று சடலத்தை பார்வையிட்ட பின் உடற்கூற்றுப் பரிசோதனைக்குட்படுத்துமாறு சட்ட வைத்திய அதிகாரிக்கு தெரிவித்தார்.
சம்பவம் தொடர்பில் ஏறாவூர் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.