வலப்பனை மத்துரட்ட பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அம்பட்டிகோட பகுதியில் நேற்று (18) வீட்டுக்கு அருகில் உள்ள மரத்தின் கிளை ஒன்று முறிந்து விழுந்து ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இவ்வாறு உயிரிழந்தவர் 47 வயதுடையவர் என பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த பகுதியில் வீசிய கடும் காற்றில் இந்தக் கிளை முறிந்து விழுந்துள்ளதாக பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர்.
குறித்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மத்துரட்ட பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.