வெளிநாட்டு ஆசை காட்டி இளம் பெண்ணுடன் சேர்ந்து கோடிக்கணக்கில் மோசடி – கிழக்கு பல்கலைக்கழக ஊழியர் கைது..!

0
74

வெளிநாட்டுக்கு அனுப்புவதாக கூறி 47 இலட்சம் ரூபா மோசடியில் ஈடுபட்ட கிழக்குப் பல்கலைக்கழகத்தின் அலுவலர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

வெளிநாட்டுக்கு அனுப்புவதாகக்கூறி ஏமாற்றப்பட்டவர்கள் வழங்கிய முறைப்பாடுகளுக்கு அமைய மேற்கொண்ட விசாரணையின்போதே யாழ்ப்பாணம் மாவட்ட விசேட குற்ற விசாரணை பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.

வெளிநாட்டுக்கு அனுப்புவதாகத் தெரிவித்து மோசடியில் ஈடுபட்ட இளம் பெண்ணொருவர் ஏற்கனவே கைது செய்யப்பட்ட நிலையில், அந்த யுவதியை வழிநடத்திய பிரதான குற்றவாளியாக மேற்படி பல்கலைக்கழக ஊழியரே காணப்படுவதாக பொலிஸார் கூறியுள்ளனர்.

அந்தப் பெண் பல்வேறு நபர்களிடம் இருந்து பெறப்பட்ட ஆறு கோடி ரூபாவுக்கும் மேற்பட்ட நிதியை கைதாகியுள்ள சந்தேகநபரின் வங்கிக் கணக்கில் செலுத்தியமை பொலிஸ் விசாரணைகளின்போது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் விசேட குற்ற விசாரணை பிரிவு முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here