கடந்த ஆண்டு எச்ஐவி எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ள 40 குழந்தைகள் இனங்காணப்பட்டதாக தேசிய பாலியல் நோய் மற்றும் எயிட்ஸ் ஒழிப்பு திட்டம் தெரிவித்துள்ளது.
வயோதிபர்களின் எண்ணிக்கை 3,169 ஆக பதிவாகியுள்ளதாக தேசிய பாலியல் நோய் விசேட வைத்திய நிபுணர் வினோ தர்மகுலசிங்க தெரிவித்தார்.
எச்.ஐ.வி.யால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2022ல் 607 ஆகவும், 2023ல் 694 ஆகவும் பதிவாகியுள்ளதாகவும், இது 14 சதவீதம் அதிகமாகும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த 694 நோயாளிகளில் 613 பேர் ஆண்கள் எனவும் அவர் குறிப்பிட்டார்.
இதற்கிடையில், 15 முதல் 24 வயதுக்குட்பட்ட பதின்ம வயதினரிடையே எய்ட்ஸ் பரவுவது அதிகரித்து வருவதாக விசேட வைத்திய நிபுணர் வினோ தர்மகுலசிங்க மேலும் குறிப்பிட்டார்.