மாணவன் ஒருவர் ஹிக்கடுவ ஆற்றில் நீராடச் சென்ற நிலையில், நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
கரந்தெனிய பகுதியிலுள்ள பாடசாலையில் கல்வி பயிலும் எல்பிட்டி பிரதேசத்தைச் சேர்ந்த 16 வயதுடைய மணவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
குறித்த மாணவன் நேற்று மாலை கோவிலுக்குச் செல்வதாக பெற்றோரிடம் கூறிவிட்டு தனது நண்பர்களுடன் வீட்டில் இருந்து புறப்பட்டதாக அவரது தந்தை தெரிவித்துள்ளார்.
ஹிக்கடுவ ஆற்றில் நீராடுவதற்கு 9 பேர் சென்ற நிலையில், 5 பேர் நீரில் மூழ்கியதில் நால்வர் மீட்கப்பட்டுள்ளனர்.
நீரில் மூழ்கி காணமல்போன மாணவனை பொலிஸ் உயிர்காக்கும் படை மற்றும் பிரதேசவாசிகள் இணைந்து தேடியுள்ளனர்.
அத்துடன் ஹிக்கடுவ புகையிரத பாலத்திற்கு அருகில் இன்று (21) காலை மாணவனின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிதந்துள்ளனர்.