நுவரெலியாவில் விடுதி ஒன்றிலிருந்து இளைஞனின் சடலம் மீட்ப்பு.!

0
87

நுவரெலியாவில் கூட்டுறவு தங்குமிட விடுதியிலிருந்து (22) இன்றைய தினம் ஆணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் பனாபிட்டிய கரந்தெனிய பகுதியை சேர்ந்த 31 வயதுடையவர் என பொலிஸார் தெரிவித்தனர்

குறித்த நபர் கடந்த (19) ஆம் திகதி வெள்ளிக்கிழமை பிற்பகல் தங்குமிடத்திற்கு வந்தாகவும் அந்த இடத்தை விட்டு (22) காலை வெளியேறுவதாக விடுதி நிர்வாகத்துக்கு தெரிவித்துள்ளார்

எனினும் இன்று (22) திங்கட்கிழமை காலை வரை அவர் வெளியே வராத காரணத்தால் சந்தேகம் ஏற்பட்டு அறையில் ஜன்னல் பகுதியில் இருந்து பார்த்த போது, குறித்த நபர் தரையில் விழுந்து கிடப்பதைப் பார்த்து ஊழியர் ஒருவர் இது குறித்து நுவரெலியா பொலிஸாருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.

சம்பவயிடத்துக்கு சென்ற பொலிஸார் குறித்த நபர் தங்கியிருந்த அறையின் கதவு உற்பகுதியில் பூட்டப்பட்டு இருந்தமையால் கதவினை உடைத்துக்கொண்டு உள்நுளைந்த போது கீழே விழுந்த நிலையில் காணப்பட்டுள்ளார்.

இதனை தொடர்ந்து 1990 நோயாளர் காவு வண்டி சேவைக்கு அழைப்பு விடுத்த்துள்ளனர் ஸ்தலத்துக்கு விரைந்தவர்கள் பரிசோதனை செய்து குறித்த நபர் உயிரிழந்துள்ளதை உறுதிப்படுத்தினர்.

தொடர்ந்து பொலிஸார் சடலத்தை மீட்டு உடற்கூற்று பரிசோதனைக்காக நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்துள்ள நிலையில் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here