திருகோணமலை – தம்பலகாமம் பகுதியில் எரிந்த நிலையில் ஆண் ஒருவரின் சடலம் ஒன்று பொலிசாரால் மீட்கப்பட்டுள்ளது.
தம்பலகாமம் – கூட்டாம்புளி எனும் பகுதியில் வயல் செய்கை பகுதியில் குறித்த சடலம் காணப்பட்ட நிலையில், அப்பகுதி விவசாயிகளினால் பொலிசாருக்கு வழங்கப்பட்ட தகவலின் அடிப்படையில் நேற்று முன் (20) மாலை குறித்த சடலம் மீட்கப்பட்டுள்ளது.
குறித்த நபரின் அடையாள அட்டை கண்டெடுக்கப்பட்டுள்ளதாகவும் அதன் அடிப்படையில் குறித்த நபர் 53 வயதான தம்பலகாமத்தைச் சேர்ந்தவர் எனவும் அன்புவழிபுரத்தில் திருமணம் முடித்தவர் எனவும் தற்போது பிரான்ஸ் நாட்டில் வசித்து வருபவர் எனவும் தெரிய வந்துள்ளது.
திருமண நிகழ்வு ஒன்றுக்காக சில நாட்களுக்கு முன்னர் பிரான்சில் இருந்து சொந்த மண்ணுக்கு வந்திருந்த நிலையிலேயே குறித்த சம்பவம் இடம்பெற்றிருப்பதாகவும் தெரிய வருகின்றது.
குறித்த சடலம் தற்போது பிரேத பரிசோதனைக்காக திருகோணமலை வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை தம்பலகாமம் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.