இலங்கையர்களுக்கு நாளை நள்ளிரவு சந்திரனால் ஏற்படும் சனி கிரகணத்தை காணக்கூடிய அரிய வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
18 ஆண்டுகளுக்கு பின்பு காணப்படும் சனியின் சந்திரகிரகமானது நாளை 24 ஆம் திகதி காணப்படும் என்று கூறப்படுகின்றது. இந்த நிகழ்வானது மீண்டும் 2037ஆம் ஆண்டு மக்களுக்குப் புலப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
சூரிய குடும்பத்தின் மாபெரும் கிரகமான சனியின் அபூர்வ நிகழ்வு நாளை நள்ளிரவில் சந்திரனிடம் இருந்து மறைகிறது.
அதன்படி, சந்திரன் சனி கிரகத்திற்கு முன்னால் செல்லும்போது, அது பூமியின் கண்ணுக்கு தெரியாததாக மாறி, சுமார் ஒரு மணி நேரம் இருபது நிமிடங்கள் சந்திரனால் மறைக்கப்படும்.
இந்த அரிய நிகழ்வை தங்கள் கண்களால் காணும் வாய்ப்பு இலங்கையர்களுக்கு கிடைத்துள்ளது. இந்த நிகழ்வானது இலங்கையை தவிர இந்தியா, மியான்மர், சீனா, ஜப்பான் ஆகிய நாடுகளிலும் இந்தக் கருத்தை வெவ்வேறு காலகட்டங்களில் காண முடிகிறது.
வெறும் கண்களால் இந்நிகழ்வினைக் காணமுடியும் என்றாலும், சனியின் வளையங்களைக் காண்பதற்கு சிறிய தொலைநோக்கி பயன்படுத்த வேண்டும்.