வீதியில் சென்றுக்கொண்டிருந்த நபரொருவர் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார்.
யாழ் – வட்டுக்கோட்டை பகுதியைச் சேர்ந்த பரமசாமி சிவலிங்கம் (56) என்ற நான்கு பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்…
குறித்த நபர் நேற்றைய தினம் (22) உரும்பிராயிலுள்ள தனது சகோதரியின் வீட்டுக்கு சென்றுவிட்டு மோட்டார் சைக்கிளுக்கு காற்று நிரப்புவதற்காக உரும்பிராய் வேம்பன் வீதியால் மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்த வேளை திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்த நபரின் மரண விசாரணையை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார். மேலும், உயிரிழந்தவர் மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ளதாக உடற்கூற்றுப் பரிசோதனை முடிவில் தெரியவந்துள்ளது.