உலகின் முதல் நிலை பணக்காரர்களில் ஒருவரான அமெரிக்க வர்த்தகர் எலான் மஸ்க் அடுத்த மாதம் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இலங்கையில் தனது Star link செயற்கைக்கோள் இணைய சேவையை அறிமுகப்படுத்துவதற்காக, இவரது விஜயம் அமையுமென எதிர்பார்க்கப்படுகிறது. இந்த இணைய வசதி சேவையை இலங்கையில் வழங்குவதற்கு இலங்கை அரசாங்கம் முன்னதாக அனுமதி வழங்கியுள்ளது.
இதற்கமைய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமும் இதற்கான ஒப்புதலை வழங்கியுள்ளது.
Star link செயல்பாடுகளுக்குத் தேவையான விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகள் தற்போது வேகமாக உருவாக்கப்பட்டு வருகின்றன.