தனது 10 வயது மகளை து.ஷ்.பி.ர.யோ.க.ம் செய்த தந்தை கைது.!

0
50

தனது 10 வயது மகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்த தந்தை ஒருவரை இன்று செவ்வாய்க்கிழமை (23) கைது செய்துள்ளதாக பசறை பொலிஸார் தெரிவித்தனர்.

45 வயதுடைய பசறை – வெல்கொல்ல பகுதியை சேர்ந்த நபர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த நபர் தனது மனைவி வயலுக்கு சென்றிருந்த வேளையில் 10 வயதுடைய தனது மகளை பாலியல் துஷ்பிரயோகத்திற்குட்படுத்தியுள்ளதாக குறித்த நபரின் மனைவி பசறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

தான் வீட்டுக்கு வந்த போது மகள் மிகவும் பயந்த நிலையில் இருந்ததாகவும் மகளிடம் வினவிய போது தனது தந்தை தனக்கு செய்த செயலை தன்னிடம் கூறியதாக தாயார் முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார்.

சிறுமி பசறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் மேலதிக சிகிச்சைக்காக பதுளை பொது வைத்தியசாலைக்கு மாற்றப்படவுள்ளதாக வைத்தியசாலை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

சந்தேக நபரிடம் விசாரணைகளை மேற்கொண்டதன் பின்னர் பசறை நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக பசறை பொலிஸார் தெரிவித்தனர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here