நேபாள தலைநகர் காத்மாண்டுவில் இருந்து விமானம் ஒன்று புறப்பட்டபோது விபத்துக்குள்ளானதில் 18 பேர் உயிரிழந்ததாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
நேபாளத்தின் தலைநகரமான காத்மாண்டுவில் உள்ள திரிபுவன் விமான நிலையத்தில் இருந்து, பிரபல சுற்றுலா தளமான போகராவுக்கு புறப்பட்ட சவுர்யா ஏர்லைன்ஸ் விமானத்தில் 19 நபர்கள் இருந்ததாக நம்பப்படுகிறது.
பராமரிப்பு பணிகளுக்காக எடுத்துச் செல்லப்பட்ட விமானத்தில் சவுர்யா ஏர்லைன்ஸ் நிறுவனத்தை சேர்ந்த 17 பேர் மற்றும் 2 விமானிகள் இருந்துள்ளனர்.
இந்த விபத்தில் 18 பேர் உயிரிழந்ததாகவும் ஒரு விமானி மாத்திரம் காயங்களுடன் உயிர் தப்பியுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
விமான பாதுகாப்பு விவகாரத்தில் மிகவும் மோசமாக நடந்து கொள்வதாக நேபாளத்தின் மீது அடிக்கடி விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் விபத்தின் போது பதிவான காணொளி தற்போது வௌியாகியுள்ளது.