காதலியுடன் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக இளைஞன் ஒருவன் தன் உயிரை மாய்த்துக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஓட்டமாவடி பகுதியைச் சேர்ந்த 18 வயது இளைஞன் ஒருவனே இவ்வாறு தனது உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார்.
கொழும்பு புறக்கோட்டை பகுதியில் வர்த்தக நிலையமொன்றில் வேலை செய்து வந்த இளைஞனே நேற்று புதன்கிழமை (24) இந்த அவசர முடிவை எடுத்துள்ளார்.
காதலிக்கு வீடியோ அழைப்பை எடுத்து தொடர்பு கொண்ட நிலையில் தனது உயிரை விட்டுள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளின் போது தெரிய வந்துள்ளது.
மரணமடைந்த இளைஞனின் உடல் பிரேத பரிசோதனைக்காக கொழும்பு வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை புறக்கோட்டை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.