முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் உள்ள வள்ளிபுனம் மகாவித்தியாலயத்தில் பாடசாலை முடித்து வெளியேறிய மாணவர்கள் மீது வெளியில் இருந்த வந்த மாணவ குழு ஒன்று தாக்குதல் நடத்தியுள்ளது.
இன்று 25.07.2024 மாலை 1.30 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. மாணவர்களுக்கிடையில் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரியினை சேர்ந்த இரண்டு மாணவர்கள் உள்ளிட்ட வள்ளிபுனம் மகாவித்தியாலய மாணவர்கள் நால்வர் உள்ளிட்ட 6 பேர் கொண்ட குழு பாடசாலை விட்டு திரும்பிய மூன்று மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளார்கள்.
பாடசாலை நுளைவாயிலில் பாடசாலை முடிந்து வெளியேறிய சாதாரணதர மாணவர்கள் மீது வெளியில் இருந்து வந்த உயர்தர மாணவர்கள் குழுவினரே இந்த தாக்குதலை மேற்கொண்டு விட்டு தப்பி சென்றுள்ளார்கள்.
இந்த சம்பவத்தினை தொடர்ந்து குறித்த பகுதியில் பெற்றோர்கள் ஒன்றுகூடியுள்ளதுடன் பொலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு சம்பவ இடத்திற்கு விரைந்த புதுக்குடியிருப்பு பொலீசார் தாக்குதலுக்கு உள்ளான மாணவர்களை அழைத்து சென்று தாக்குதல் நடத்திய மாணவர்களின் வீடுகளுக்க சென்று அவர்களை உடனடியாக பொலீஸ் நிலைத்திற்கு கொண்டுவந்து ஒப்படைக்குமாறு பெற்றொர்களுக்கு அறிவித்துள்ளார்கள்.
மேற்கொண்டு விசாரணைகளை முன்னெடுத்த புதுக்குடியிருப்பு பொலீசார் மாணவர்கள் மீது தாக்குதல் நடத்திய புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரி மாணவர்கள் உள்ளிட்ட 6 மாணவர்களையும் கைது செய்து தடுத்துவைத்துள்ளார்கள்.
இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணையினை புதுக்குடியிருப்பு பொலீசார் மேற்கொண்டு வருகின்றார்கள்.