ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக மாணவன் ஒருவர் விபரீத முடிவால் உயிரிழப்பு.!

0
57

பிலிமத்தலாவை பரகட வெல்ல பிரதேசத்தைச் சேர்ந்த ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் இரண்டாம் வருட மாணவன் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

குறித்த மாணவண் கடந்த செவ்வாய்க்கிழமை (23) மதியம் வீட்டிலிருந்து சுமார் 100 மீற்றர் தூரத்திலுள்ள மரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

யட்டிநுவர மரண விசாரணை அதிகாரி சேனக கருணாரத்ன முன்னிலையில் நடைபெற்ற விசாரணையின் போது, ‘எல்லா இரகசியங்களுக்கும் விடைகொடுக்கிறேன்” என மாணவன் எழுதிய கடிதம் வீட்டிலிருந்து கண்டுபிடிக்கப்பட்டது.

மேலும் உயிரிழந்த மாணவனின் தாயார் உதவி அதிபர் எனவும் அவரும் ஏனைய இரு பிள்ளைகளும் சம்பவம் இடம்பெற்றபோது வீட்டில் இருக்கவில்லையெனவும் பொலிஸ் விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.

பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களின் பணிப்பகிஷ்கரிப்பு காரணமாக இந்த மாணவன் சுமார் 02 மாதங்களை வீட்டிலேயே கழித்துள்ளதாகப் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

பேராதனை பல்கலைக்கழக மருத்துவ பீடத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் கசுன் ஏகநாயக்கவினால் பிரேத பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது.

சாட்சியங்கள் மற்றும் மருத்துவ அறிக்கைகளைக் கருத்திற்கொண்ட மரண விசாரணை அதிகாரி சேனக கருணாரத்ன, தூக்கில் தொங்கியதாலேயே மரணம் ஏற்பட்டுள்ளதாகத் தீர்மானித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here