கணித பாட ஆசிரியரை கத்தியால் கு.த்.தி.ய மாணவன் கைது.!

0
111

புத்தளம் நகரத்தில் உள்ள பாடசாலை ஒன்றின் நுழைவாயிலுக்கு அருகில் மாணவனின் கத்திக்குத்துக்கு இலக்காகி ஆசிரியர் ஒருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

புத்தளம் நகரத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் கடமையாற்றும் கணித பாட ஆசிரியரொருவரே இவ்வாறு காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

காயமடைந்த ஆசிரியர் புத்தளம் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

காயமடைந்த ஆசிரியருக்கும் தாக்குதலை மேற்கொண்ட மாணவனுக்கு இடையில் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவத்தையடுத்து சந்தேக நபரான மாணவன் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்டவர் காயமடைந்த ஆசிரியர் கடமையாற்றும் அதே பாடசாலையில் க.பொ.த உயர்தரத்தில் கல்வி கற்கும் மாணவரொருவராவார்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை புத்தளம் தலைமையக பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here