பிடிகல – மாபலகம வீதியின் மத்தக்க பிரதேசத்தில் டிப்பர் ஒன்றும் கார் ஒன்றும் நேருக்கு நேர் மோதியதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தந்தையும் மகனும் உயிரிழந்துள்ளனர்.
இவ்விபத்தில் இரு பெண்கள் காயமடைந்து எல்பிட்டிய ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்களே காரில் பயணித்துள்ளதுடன், குடும்ப அங்கத்தவர் ஒருவரே காரை செலுத்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
மோட்டார் சைக்கிளில் குறித்த வீதியில் பயணித்த அதிபர் ஒருவரும் சிறு காயங்களுடன் எல்பிட்டிய ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
விபத்து தொடர்பில் டிப்பர் சாரதியை பிடிகல பொலிஸார் கைது செய்துள்ளனர்.