கொழும்பு கிரேண்ட்பாஸ், வடுல்லவத்தை புரதர செவன அடுக்குமாடி குடியிருப்புக்கு முன்பாக துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி சிகிச்சை பெற்று வந்த பெண் இன்று (26) அதிகாலை உயிரிழந்துள்ளார்.
நேற்று (25) மாலை பெண் ஒருவர் உட்பட இருவர் மீது இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.
இதன்போது, 32 வயதான கே. ஜி. ஆர். தர்ஷன என்ற நபர் நேற்று இரவு உயிரிழந்துள்ளதுடன், ஆபத்தான நிலையில் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த பெண் இன்று காலை உயிரிழந்துள்ளார்.