திருகோணமலை உப்புவெளி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட வரோதய நகர் பிரதேசத்தில் தூக்கிட்ட நிலையில் யுவதி ஒருவரின் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளதாக உப்புவெளி பொலிசார் தெரிவித்தனர்.
குறித்த யுவதி தூக்கிட்ட நிலையில் நேற்று (25) பிற்பகல் குடும்பத்தினர் வழங்கிய தகவலை அடுத்து சடலம் மீட்கப்பட்டுள்ளது.
யுவதி 2023 ஆம் ஆண்டு, நோர்வே நாட்டு பிரஜை இலங்கைக்கு வந்து திருகோணமலையில் திருமணம் ஆகிய நிலையில் நேற்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இவ்வாறு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டவர் வரோதய நகர் பிரதேசத்தைச் சேர்ந்த ரினா ஸ்ரீலா (வயது-32) இவருக்கு 4 மாத குழந்தை ஒன்றும் உள்ளதாக தெரியவந்துள்ளது.
குறித்த சடலம் பிரேத பரிசோதனைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் மேலதிக விசாரணைகளை உப்புவெளி பொலிசார் மேற்கொண்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.