கிளிநொச்சி உருத்திரபுரம் பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் நான்கு வருடங்களுக்கு முன்னர் பிரான்ஸ் நாட்டிக்கு அகதி கோரிக்கை அமைவாக புலம் பெயர்ந்துள்ளார்.
இளைஞரின் குடும்பம் யுத்தத்தினால் பாதிக்கப்பட்டு இறுதி யுத்தத்தில் சகோதரி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இவரின் சகோதரன் பிரான்ஸ் நாட்டில் வாழ்ந்து வரும் நிலையில் அவரின் உதவியுடன் குறித்த இளைஞர் பிரான்ஸ் நாட்டுக்கு வந்துள்ளார்.
இந்நிலையில் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்னர் தரகர் ஊடாக நுவரேலியா பகுதியைச் சேர்ந்த அழகிய பெண் ஒருவருக்கு திருமணம் உறுதி செய்யப்பட்டுள்ளது.
இருவரும் காதலித்து வந்ததாக கூறப்படுகின்றது, இன் நிலையில் குறித்த இளைஞர் அதிக பணத்தை பெண் விரும்பும் தேவைகளையும் நிறைவு செய்து வந்துள்ளார், இறுதியாக ஒரு கோடி 80 லட்சம் ரூபா பணம் குறித்த பெண்ணுக்கு அனுப்பியதாக கூறப்படுகின்றது.
அதனை பெற்றுக் கொண்ட பெண் தனது சகோதரியின் திருமணத்தை சிறப்பாக செய்து முடித்துள்ளார்.
இவ்வாறு பல தேவைகளையும் இந்தியாவுக்கு குடும்பத்துடன் சுற்றுலா சென்றும் வந்துள்ளனர். கடந்த 23-07-2024 அன்று இளைஞருக்கும் பெண்ணுக்கும் இடையில் வீடியோ கோலில் கருத்து முரண்பாடு வந்து காதலி கண்முன் இளைஞர் தூக்கிட்டு உயிரிழந்துள்ளார்.
இச் சம்பவத்தில் கிளிநொச்சி உருத்திரபுரம் பகுதியைச் சேர்ந்த பாலசுப்பிரமணியம் கிருசிகன் வயது 31 என்ற இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இச் சம்பவம் தொடர்பாக இளைஞரின் குடும்பத்தினர் கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர் என கூறப்படுகின்றது.