அஸ்வெசும நலன்புரி திட்டத்தின் இரண்டாம் கட்டம் தொடர்பான கணக்கெடுப்பை எதிர்வரும் 31ஆம் திகதிக்குள், நிறைவு செய்யத் திட்டமிடப்பட்டுள்ளதாக நலன்புரி நன்மைகள் சபையின் தலைவர் ஜயந்த விஜேரத்ன தெரிவித்துள்ளார். இத் திட்டத்திற்கு விண்ணப்பிக்கத் தவறிய குடும்பங்களுக்கு, முதற்கட்டமாகக் கடந்த பெப்ரவரி மாதம் விண்ணப்பங்கள் கோரப்பட்டன.
அதற்கமைய சுமார் 454,924 விண்ணப்பங்கள் கிடைக்கப் பெற்றுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.