கண்டியில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த ஜீப் வண்டி ஒன்று இன்று (27) நிட்டம்புவ திஹாரிய பிரதேசத்தில் வீதியோரம் சென்று கொண்டிருந்த நபர் மீது மோதி விபத்துக்குள்ளாகியது.
குறித்த விபத்தில் படுகாயமடைந்த நபர் வட்டுபிட்டிவல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது உயிரிழந்துள்ளதாக நிட்டம்புவ பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
கலதுவாவ, கலகெடிஹேன பகுதியைச் சேர்ந்த 47 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
அதேவேளை விபத்து தொடர்பில் ஜீப் வண்டியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை நிட்டம்புவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.