கொழும்பில் இருந்து மன்னார் நோக்கி பயணித்த தனியார் அதிசொகுசு பேருந்து, நேற்று புத்தளம் காக்காபள்ளி வீதியில் விபத்திற்குள்ளானது.
குறித்த வீதியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் மோதி விபத்து ஏற்பட்ட போதும் பேருந்தில் பயணித்தவர்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை.
இருப்பினும் எரிபொருள் நிரப்பும் இயந்திரத்தின் மேற்பகுதியும் பேருந்தின் மேற்பகுதியும், பகுதியளவில் சேதமடைந்துள்ளது.