முல்லைத்தீவு கள்ளப்பாட்டில் அமைந்துள்ள பாடசாலைக்கு மாணவன் ஒருவன் கஞ்சாவுடன் சென்ற சம்பவம் கடந்த வியாழக்கிழமை (25) இடம்பெற்றுள்ளது.
இது தொடர்பில் தெரியவருவதாவது,…
முல்லைத்தீவு கள்ளப்பாட்டில் அமைந்துள்ள பாடசாலையொன்றில் தரம் 8இல் கல்வி கற்கும் இந்த மாணவன் தனது வீட்டில் இருந்து பாடசாலைக்கு செல்லும்போது சிறு கஞ்சா பொதி ஒன்றினை கொண்டு சென்றுள்ளான். இதனை அவதானித்த சக மாணவன் பாடசாலை அதிபரிடம் தெரிவித்துள்ளான்.
இது தொடர்பாக அந்த மாணவனை விசாரித்த பாடசாலை அதிபர், மாணவனை முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலைக்கு பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளார்.
அத்தோடு மாணவனுக்கு எங்கிருந்து கஞ்சா கிடைத்தது..? வீட்டில் கஞ்சா பாவனை இடம்பெறுகிறதா..? என பல்வேறு கோணங்களில் பொலிஸார் விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.