திருகோணமலையில் நீராட சென்ற மாணவன் நீரில் மூழ்கி உயிரிழப்பு.!

0
68

திருகோணமலை கல்மெட்டியாவ குளத்தில் நீராடச் சென்ற மாணவன் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக திருகோணமலை பொலிஸார் தெரிவித்தனர்.

திருகோணமலையிலிருந்து நேற்று சனிக்கிழமை (27) குடும்பத்தாருடன் தம்பலகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்மெட்டியாவ குளத்துக்கு சுற்றுலா சென்ற போது நீரில் மூழ்கி இவ்வாறு உயிரிழந்துள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளின் மூலம் தெரிய வருகின்றது.

இவ்வாறு உயிரிழந்த இளைஞன் திருகோணமலை பொது வைத்தியசாலையில் கடமையாற்றி வரும் சாரதியின் மகனாவார். திருகோணமலை-மனையாவளி பகுதியில் வசித்து வந்த எஸ். கோகுலராஜ் (16-வயது) எனவும் தெரிய வருகின்றது.

உயிரிழந்தவரின் சடலம் கந்தளாய் வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன் விசாரணைகளை தம்பலகாமம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here