நீச்சல் தடாகத்தில் மூழ்கி 7 வயது சிறுவன் உயிரிழப்பு..!

0
75

கண்டி லூயிஸ் பீரிஸ் மாவத்தையில் உள்ள ஹோட்டல் ஒன்றின் நீச்சல் தடாகத்தில் மூழ்கி ஏழு வயது சிறுவன் (28) காலை பரிதாபமாக உயிரிழந்துள்ளதாக கண்டி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சகோதரன் மூழ்கிக் கிடப்பதைக் கண்ட 10 வயதுடைய சகோதரனும் அவரைக் காப்பற்ற நீச்சல் தடாகத்தில் குதித்ததாகவும் பொலிஸார் கூறுகின்றனர்.

உயிரிழந்தவர் மொஹமட் மிஸ்ஜாத் எனவும், சகோதரனை காப்பாற்றுவதற்காக நீரில் மூழ்கிய அவரது சகோதரர் மொஹமட் மிஹிரான் கண்டி தேசிய வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கண்டி – குருந்துகொல்ல – வெரெல்லாகமவில் வசிக்கும் இந்த இரண்டு பிள்ளைகளும் தனது பெற்றோருடன் நேற்று முன்தினம் (27) குறித்த விடுதிக்கு சென்றுள்ளனர்.

நேற்று (28) காலை 11.00 மணியளவில் நீச்சல் குளத்தில் இரண்டு சகோதரர்களும் தனியாக இருந்த போது இளைய சகோதரன் நீச்சல் குளத்தில் விழுந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நீரில் மூழ்கிய சகோதரனை காப்பாற்ற முற்பட்ட போது, மற்றைய சகோதரனும் நீரில் மூழ்கியதாகவும் மேலும் விடுதி ஊழியர்கள் மற்றும் அவர்களது பெற்றோருடன் இணைந்து இருவரையும் கண்டி தேசிய வைத்தியசாலைக்கு எடுத்துச் சென்று அனுமதித்துள்ளனர்.

வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் போது இளைய சகோதரன் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் சம்பவம் தொடர்பில் கண்டி தலைமையக பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

வைத்தியர் அர்ச்சுனாவிடம் ஆ.பா.ச.மா.க கதைத்த முற்பட்ட பெண்.. பின்னர் நடந்த சம்பவம்.!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here