இலுக்பிட்டிய பிரதேசத்தில் இன்று (29) சீமெந்து ஏற்றிச் சென்ற லொறியொன்றும் மோட்டார் சைக்கிளும் மோதியதில் பொலிஸ் விசேட பணியகத்தில் கடமையாற்றிய பொலிஸ் சார்ஜன்ட் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் இருவர் காயமடைந்து அவிசாவளை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக ஹங்வெல்ல பொலிஸார் தெரிவித்தனர்.
அவிசாவளை புவக்பிட்டிய – தும்மோதர பகுதியிலுள்ள பாலத்தில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதாகவும், இவ்விபத்தில் லொறியும் மோட்டார் சைக்கிளும் பாலத்தின் கீழ் விழுந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.