கற்கள் மற்றும் தடிகளால் தாக்கி நபர் ஒருவரை கொலை செய்த குற்றச்சாட்டில் நான்கு பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி ஆதித்ய பட்டபெந்திகேவினால் இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
ஹொருகொடவத்த பகுதியைச் சேர்ந்த நான்கு பேருக்கே இவ்வாறு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
2013 ஆம் ஆண்டு, ஹொருகொடவத்த சாந்தவத்த பகுதியில் நபர் ஒருவரை அடித்துக் கொலை செய்ததாக 6 பிரதிவாதிகளுக்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டிருந்தது.
எனினும் வழக்கின் 2வது பிரதிவாதி விசாரணையின் போது மரணமடைந்தார். போதிய ஆதாரங்கள் இல்லாததால் 6வது பிரதிவாதி விடுவிக்கப்பட்டார்.
2017ஆம் ஆண்டு சட்டமா அதிபர் பிரதிவாதிகளுக்கு எதிராக 4 குற்றச்சாட்டுக்களின் கீழ் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தார்.
இந்த உத்தரவை பிறப்பித்த நீதிபதி, குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீதான குற்றச்சாட்டுகளை சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளதால் குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.