திருகோணமலை புறா தீவிற்கு சுற்றுலா சென்றவர்களுக்கு நேர்ந்த சம்பவம்.!

0
100

திருகோணமலைக்கு வருகை தந்த சுற்றுலா பயணிகள் கொடூரமாக தாக்கப்பட்ட சம்பவம் ஒன்று அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வெளிநாட்டில் இருந்து திருகோணமலை புறா தீவிற்கு விடுமுறைக்காக வந்த இருபது பேர் கொண்ட இலங்கையர்கள் குழு ஒன்று புறா தீவின் சுற்றுலா வழிகாட்டிகள் மற்றும் சுற்றுலா பணியாளர்களால் மிகவும் மனிதாபிமானமற்ற முறையில் நடத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

குறித்த குழுவினர் அண்மையில் புறா தீவிற்கு சுற்றுலா சென்றிருந்த நிலையில் அவர்களிடமிருந்து 90,000 ரூபாவை புறா தீவு சுற்றுலா ஊழியர்கள் வசூலித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை படகு சவாரி, நீச்சல் போன்றவற்றுக்கு தேவையான உபகரணங்கள் மிகவும் பழுதடைந்த நிலையிலேயே அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

அந்த உபகரணங்களை சுற்றுலா பயணிகள் திருப்பிக் கொடுக்கும் போது, குறித்த உபகரணங்கள் பயன்படுத்தப்பட்டதால் இவ்வாறு பழுதடைந்துள்ளதாக தெரிவித்து, மேலதிகமாக 12,000 ரூபாவை செலுத்துமாறு சுற்றுலா வழிகாட்டிகள் கேட்டுள்ளனர்.

ஆனால் சுற்றுலா பயணிகள் பணத்தை தர மறுத்ததால், சுற்றுலா குழுவில் இருந்த பெண்கள் உட்பட அனைவரையும் சுற்றுலா வழிகாட்டிகள் உள்ளிட்ட சிலர் பொல்லுகளால் தாக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் இவ்வாறான சம்பவங்கள் தொடர்பில் அதிகாரிகள் தலையிட்டு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here