வளர்ப்பு நாய்க்கு அதிக உணவு கொடுத்ததால் நேர்ந்த சம்பவம்.. பெண்ணுக்கு சிறை.!

0
145

நியுசிலாந்து நாட்டில் பெண் ஒருவர் தனது 53 கிலோகிராம் (118 pounds) எடையுடைய வளர்ப்பு நாய்க்கு அதிகமான உணவுகளை கொடுத்த குற்றத்துக்காக கைது செய்யப்பட்டதுடன், இரண்டு மாத சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது.

மேலும் அதிகமான உணவுகளை குறித்த நாய்க்கு கொடுத்து கொலை செய்துள்ளதாக அவர் மீது புகாரும் அளிக்கப்பட்டுள்ளது.

விலங்குகள் மீதான வன்கொடுமை தடுப்பு சங்கத்தின் (SPCA) அறிக்கையின்படி, நுகி என்று பெயரிடப்பட்ட நாய், 2021 ஆம் ஆண்டில் 54 கிலோகிராம் (120 பவுண்டுகள்) எடையும், கிட்டத்தட்ட அசையாத நிலையில் பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து அதன் உரிமையாளரை தேடும் நடவடிக்கையின் போது, அவரிடமிருந்து பல நாய்களையும் பொலிஸார் மீட்டுள்ளனர்.

SPCA இன் பராமரிப்பில் நுகி, இரண்டு மாதங்களில் 8.8 கிலோகிராம் (19.6 பவுண்டுகள்) அல்லது அதன் உடல் எடையில் சுமார் 16.5 சதவீதத்தை இழந்தாலும் நுக்கி கல்லீரல் இரத்தக்கசிவு காரணமாக பரிதாபகரமாக உயிரிழந்தது.

தொடர்ந்து சுகியின் இந்த நிலைக்கு காரணம் தான் தான் என ஒப்புக்கொண்டதையடுத்து, அவருக்கு இரண்டு மாத சிறைத்தண்டனையும் நியுசிலாந்து டொலர் 1,222 ஆக ($720) அபராதமும் விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

மேலும், அவரால் இனி நாய் வளர்க்கப்பட கூடாது எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here