பாட்டியிடம் வளர்ந்த 13 வயது சிறுமியொருவர் தமது மாமன் மகனால் கர்ப்பமாக்கப்பட்ட சம்பவம் அங்குருவத்தோட்ட, வெனிவெல்பிட்டிய பிரதேசத்தில் பதிவாகியுள்ளது.
பெற்றோர்கள் இன்றி பாட்டியின் அரவணைப்பில் வளர்ந்த சிறுமி மாமன் மகனால் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாகி தற்போது ஒன்றரை மாத கர்ப்பிணியாக உள்ளதாக அங்குருவத்தோட்ட பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சிறுமி வசித்த அதே வீட்டில் அவரது மாமாவின் மகனான 18 வயதுடைய இளைஞன் சிறுமியை பலமுறை துஷ்பிரயோகம் செய்துள்ளதாக பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சிறுமியின் பாதுகாப்பின்மை குறித்து அங்குருவத்தோட்ட பொலிஸார் பல தடவைகள் அவரது பாட்டிக்கு அறிவித்த போதும், பாட்டியின் கவனக்குறைவால் சிறுமிக்கு இந்த கதி ஏற்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் 18 வயதுடைய இளைஞன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன், இன்று (31) ஹொரணை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.
சிறுமியை சட்ட வைத்தியரிடம் முன்னிலைப்படுத்துவதற்காக ஹொரணை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அங்குருவாதொட்ட பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.