பொருவடந்த – பொரலுகொட பிரதேசத்தில் இன்று (1) வீதியோரத்தில் உரையாடிக் கொண்டிருந்த இருவர் மீது சொகுசு கார் மோதியதில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் ஒருவர் படுகாயமடைந்துள்ளதாக ஹொரணை தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்தில் உயிரிழந்தவர் புளத்சிங்கல ஹல்வத்துர பகுதியைச் சேர்ந்த வசந்த லக்மால் என்ற 29 வயதுடைய திருமணமாகாத இளைஞரும், பொருவ தண்ட அருணகம பகுதியைச் சேர்ந்த 61 வயதான ஒருவருமே விபத்தில் படுகாயமடைந்துள்ளனர்.
இறந்தவர் அப்பகுதியில் காய்கறி கடை ஒன்றை தொடங்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வந்ததாகவும், அவர் திருமணம் முடிக்க உள்ள பெண் தனது தந்தையுடன் அவருக்கு முச்சக்கரவண்டியில் மதிய உணவு எடுத்து வந்ததாகவும் போலீசார் தெரிவித்தனர்.
காயமடைந்த மற்றைய நபர் பெண்ணின் தந்தை என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.