18 வயதில் திருமணம் – பரிதாபமாக உயிரிழந்த யுவதி.!

0
134

18 வயதுடைய திருமணமான யுவதியொருவர் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்தமையால், பண்வஸ்நுவர, கிரிமெட்டிய கெலினாவல பிரதேசத்தில் நேற்று (31) பதற்றமான சூழல் ஏற்பட்டது.

கணவனால் தாக்கப்பட்டே யுவதி உயிரிழந்துள்ளதாகவும் சந்தேகநபரான கணவரை இதுவரை பொலிஸார் கைது செய்யவில்லை எனவும் பிரதேசவாசிகள் குற்றம் சுமத்துகின்றனர்.

கிரிமெட்டிய கெலினாவல பிரதேசத்தில் வசித்து வந்த 18 வயதுடைய செனுரி பிரேமதிலக என்ற யுவதி கடந்த சில நாட்களுக்கு முன்னர் உயிரிழந்தார்.

செனுரியின் கணவரின் தாக்குதலே அவரது மரணத்திற்குக் காரணம் என்று உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

இதனடிப்படையில், மரணத்தில் சந்தேகம் நிலவுவதாகவும் செனுரியின் கணவரை கைது செய்யுமாறு பொலிஸாரை வலியுறுத்தியும் அவரின் உறவினர்கள் மற்றும் பிரதேசவாசிகள் நேற்று கிரிமெட்டிய வீதியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும், சடலத்தை வீதிக்கு எடுத்துச் சென்று போராட்டத்தில் ஈடுபட்டனர். செனுரியின் கணவரின் தந்தை செனுரியின் தாயை தாக்கியதாக உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here