நீர்கொழும்பில் பாடசாலை அதிபரால் 6 ஆம் வகுப்பு மாணவிக்கு நேர்ந்த சம்பவம்.!

0
92

நீர்கொழும்பு பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் மாணவி ஒருவர் அதே பாடசாலையில் கடமையாற்றும் அதிபர் ஒருவரால் பாலியல் துஷ்பிரயோகத்துக்குட்படுத்தப்பட்டுள்ளதாக நீர்கொழும்பு பொலிஸாருக்கு முறைப்பாடு ஒன்று கிடைத்துள்ளது.

6 ஆம் வகுப்பில் கல்வி கற்கும் மாணவியொருவரே இவ்வாறு பாலியல் துஷ்பிரயோகத்துக்குள்ளாகியுள்ளார்.

சந்தேக நபரான அதிபர் இந்த மாணவியைப் பல முறை பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளதாக இந்த முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த பாடசாலையில் கல்வி கற்கும் பல மாணவிகள் சந்தேக நபரான அதிபரால் பாலியல் துஷ்பிரயோகத்துக்குட்படுத்தப்பட்டு பாடசாலையை விட்டு விலகிச் சென்றுள்ளதாக இந்த முறைப்பாட்டில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இது தொடர்பில் நீர்கொழும்பு பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here