மாவனெல்லைநகர முன்பள்ளி ஒன்றில் தலையில் தேங்காய் விழுந்ததில் படுகாயமடைந்த சிறுமி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ரனுலி ஹசத்மா எதிரிமான்ன என்ற சிறுமியே இவ்வாறு உயிரிழந்துள்ளது.
தேங்காய் விழுந்ததில் படுகாயமடைந்த சிறுமி மாவனெல்லை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் ஆபத்தான நிலையில் கண்டி தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
சிறுமியின் தாய் குடும்ப நலப்பணியாளர் என்றும், அவரது தந்தை அரச வைத்தியசாலையின் நோயாளர் காவு வண்டி சாரதியாக பணிபுரிந்து வருவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவத்தில் உயிரிழந்த சிறுமியின் பிரேத பரிசோதனை கண்டி தேசிய வைத்தியசாலையில் மேற்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.