லொறியும் பேருந்தும் நேருக்கு நேர் மோதி விபத்து..!

0
110

நுவரெலியா – ஹட்டன் ஏ7 பிரதான வீதியில் பாமஸ்டன் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் 8 பேர் காயமடைந்துள்ளனர்.

குறித்த விபத்து இன்று (02) காலை இடம்பெற்றுள்ளது. லொறி ஒன்றும் சொகுசு பஸ் ஒன்றும் மோதியதில் விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்து தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

தலவாக்கலை பகுதியில் இருந்து நுவரெலியா பகுதியை நோக்கி பயணித்த லொறியுடன் நுவரெலியாவில் இருந்து ஹட்டன் நோக்கி பயணித்த கொகுசு பேரூந்து வேகத்தை கட்டுப்படுத்த முடியாமல் நேருக்கு நேர் மோதியதில் குறித்த விபத்து ஏற்பட்டுள்ளது.

விபத்தில் காயமடைந்தவர்கள் லிந்துலை வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்து தொடர்பில் லிந்துலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here